VSP33 படப்பிடிப்பு இன்று துவங்கியது!

சந்த்ரா ஆர்ட்ஸ் சார்பாக இசைக்கி துரை தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் மக்கள்செல்வன். இந்த படத்திற்கு இசையமைக்க நிவாஸ் கே ப்ரசன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் சேதுபதியின் 33 வது படம் பூஜையுடன் இன்று துவங்கியது.
 | 

VSP33 படப்பிடிப்பு இன்று துவங்கியது!

சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி, அதைதொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் "கடைசி விவசாயி", எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் "லாபம்" உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு விருமாண்டி இயக்கத்தில்  க/பெ.ரணசிங்கம் என்னும் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்த்ரா ஆர்ட்ஸ் சார்பாக இசைக்கி துரை தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் மக்கள்செல்வன்.

இந்த படத்தை பேராண்மை, புறம்போக்கு படங்களின் இயக்குனர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட் கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார். இந்த படத்திற்கு இசையமைக்க நிவாஸ் கே ப்ரசன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் சேதுபதியின் 33 வது படம் பூஜையுடன் இன்று துவங்கியது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP