தமிழர்களின் ஆதி விளையாட்டு குறித்த படத்திற்கு வாழ்த்துக்கூறியுள்ள இசையமைப்பாளர்!  

இன்று முதல் (ஆகஸ்ட் 22) திரைக்கு வந்துள்ள ’கென்னடி கிளப்’ படம் குறித்து தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் டி. இமான் தமிழர்களின் ஆதி விளையாட்டான கபடியை மையமாக வைத்து பெண் முன்னேற்றம் பேசும் கென்னடிகிளப் இன்று முதல் உலகமெங்கும் என பதிவிட்டு வாழ்த்துக்கூறியுள்ளார்.
 | 

தமிழர்களின் ஆதி விளையாட்டு குறித்த படத்திற்கு வாழ்த்துக்கூறியுள்ள இசையமைப்பாளர்!  

பெண்கள் கபடியை மையமாக கொண்டு சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ’கென்னடி கிளப்’.  இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன்  முக்கிய நகரங்களில் உள்ள 16  கபடிக்குழுக்களும் இணைந்துள்ளனர் . இந்தப் படத்திற்கு  டி.இமான் இசையமைத்துள்ளார்.

இன்று முதல் (ஆகஸ்ட் 22) திரைக்கு வந்துள்ள இந்த படம் குறித்து தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் டி. இமான் தமிழர்களின் ஆதி விளையாட்டான கபடியை மையமாக வைத்து பெண் முன்னேற்றம் பேசும் கென்னடிகிளப் இன்று முதல் உலகமெங்கும் என பதிவிட்டு வாழ்த்துக்கூறியுள்ளார். 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP