விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைக்கோரி வழக்கு

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்திற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 | 

விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைக்கோரி வழக்கு

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரும் 10ம் தேதி உலகளவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு தடைக்கோரி பிரமிட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. மர்மயோகி படத்திற்காக கமல்ஹாசன் பெற்ற ரூ. 4 கோடியை இதுவரை திருப்பித்தரவில்லை, கமல்பெற்ற ரூ. 4 கோடி சம்பளத்தை வட்டியுடன் சேர்த்து ரூ. 5.44 கோடியாக தரவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமிட் சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP