இன்னும் இரண்டு நாட்களில் ரிலீஸாகும் விக்ரமின் கே கே

சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'. அதிரடி அக்ஷன் கலந்த இந்த படம் இன்னும் இரண்டு நாட்களில் ( ஜூலை 19) திரைக்கு வர உள்ளது.
 | 

இன்னும் இரண்டு நாட்களில் ரிலீஸாகும் விக்ரமின் கே கே

சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'.

இது விக்ரமின் 56 வது திரைப்படமாகும். மேலும், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இதில், விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அதிரடி ஆக்‌ஷன் கலந்த இந்த படம்  இன்னும் இரண்டு நாட்களில் ( ஜூலை 19) திரைக்கு வர உள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP