கமலின் தயாரிப்பில் உருவாகும் விக்ரமின் 56 வது  திரைப்படம்!

கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம், சியான் விக்ரமின் 56 வது திரைப்படமான 'கடாரம் கொண்டான்' என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது. இறுதி கட்ட பணிகளை நெருங்கியுள்ள இதன் ட்ரைலர் வரும் ஜூலை 3ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
 | 

கமலின் தயாரிப்பில் உருவாகும் விக்ரமின் 56 வது  திரைப்படம்!

கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்  நிறுவனம், சியான் விக்ரமின் 56 வது திரைப்படமான 'கடாரம் கொண்டான்' என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது.  இந்தப் படத்தை கமல் நடிப்பில் வெளிவந்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய, ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். 

அதோடு இதில்  கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் நடிகர் நாசரின் மகன் அபி முக்கிய ரோலில் வருகிறார்.  இந்த  படத்திற்கு ஜிப்ரான்  இசையமைத்துள்ளார். இறுதி கட்ட பணிகளை நெருங்கியுள்ள இதன்  ட்ரைலர் வரும் ஜூலை 3ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP