கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம்

கமல்ஹாசன் தயாரிப்பில், விக்ரம் நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
 | 

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம்

கமல்ஹாசன் தயாரிப்பில், விக்ரம் நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.   

கமல்ஹாசனுக்குப் பிறகு நடிப்புக்காக தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் வருத்திக் கொள்ளத் தயாராக இருக்கும் கலைஞனாக நிரூபித்து வருகிறவர் விக்ரம். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள். ஆம், விக்ரம் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.  கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம்

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கமல் நடிப்பில் சமீபத்தில் வந்த ’தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு இசையமைக்கும் பணியை துவங்கிவிட்டதாக ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் 'சாமி 2' , கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே 'மஹாவீர் கர்ணா' என்ற சரித்திரப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.  
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP