நடிகர் சிம்புவின் தம்பிக்கு திருமணம்: வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்

இஸ்லாம் மதத்தை சார்ந்த நபீலா ஆர்.அஹமத் என்கிற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார் குறளரசன். இந்நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற டி. ராஜேந்தர் குறளரசன் திருமண அழைப்பிதழை விஜயகாந்திடம் வழங்கினார்.
 | 

நடிகர் சிம்புவின் தம்பிக்கு திருமணம்:  வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்

கடந்த சில மாதங்களுக்கு முன் தன் பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார் சிம்புவின் தம்பி குறளரசன். இதனை தொடர்ந்து இஸ்லாம் மதத்தை சார்ந்த  நபீலா ஆர்.அஹமத் என்கிற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.  வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி  இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது

இந்நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்  வீட்டிற்கு சென்ற இயக்குநரும், இசையமைப்பாளரருமான, சிம்பு, குறாளரசனின் தந்தை டி. ராஜேந்தர்  குறளரசன்  திருமண அழைப்பிதழை விஜயகாந்திடம் வழங்கினார். 

இது குறித்து தனது ட்விட் செய்துள்ள விஜயகாந்த்; திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவு கூர்ந்தோம். குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துகள் என்று பதிவு செய்துள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP