உபதேசிப்பதை போல விஜய் நடந்து கொள்ள வேண்டும்: பிரபல திரையரங்கு காட்டம்

சர்கார் படத்தின் டிக்கெட்களை பிளாக்கில் விற்க வேண்டும் என்று கூறுவதால் முதல் 2 நாட்களுக்கு திரையிட போவதில்லை என்றும் உபதேசிப்பதை போல விஜய் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தஞ்சை ராணி தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 | 

உபதேசிப்பதை போல விஜய் நடந்து கொள்ள வேண்டும்: பிரபல திரையரங்கு காட்டம்

சர்கார் படத்தின் டிக்கெட்களை பிளாக்கில் விற்க வேண்டும் என்று கூறுவதால் முதல் 2 நாட்களுக்கு திரையிட போவதில்லை என்று தஞ்சை ராணி தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் சர்கார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி, ராதா ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கதை விவகாரத்தில் சிக்கி நீதிமன்றம் வரை படம் சென்று வந்திருக்கும் நிலையில், தீபாவளிக்கு சர்கார் வெளியாக உள்ளதால் முதல் இரண்டு நாட்களுக்கு மட்டும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தஞ்சையில் உள்ள பிரபல ராணி பேரடைஸ் திரையரங்கம் நிர்வாகம், தனது முகநூல் பக்கத்தில், "சர்கார் படத்தின் முதல் இரண்டு நாள் டிக்கெட்களை பிளாக்கில் விற்க நாங்கள் விநியோகஸ்தர்களிடம் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. எனவே சர்கார் படத்தை திரையிட போவதில்லை. நல்ல முறையில் நல்ல சினிமாக்களை வெளியிடவே நாங்கள் எப்போதும் விரும்புகிறோம், நடிகர் விஜய் மற்றவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன்னால், அவர் அப்படி நடந்து கொள்ள வேண்டும்" என காட்டமாக தெரிவித்துள்ளது. 

சமீப காலமாக விஜய் தனது திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் அரசியல் கலந்து பேசுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP