குழந்தைகளை கவர்ந்த விஜய் சேதுபதி - வைரல் வீடியோ!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ரஜினியுடன் 'பேட்ட' திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இவர் இரண்டு பெண் குழந்தைகளை 'ஆர் யூ ஓகே பேபி' என கொஞ்சி முத்தமிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

குழந்தைகளை கவர்ந்த விஜய் சேதுபதி - வைரல் வீடியோ!

இளைஞர்களின் 'இஷ்ட' நாயகனாகி விட்டார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது ரஜினியுடன் 'பேட்ட' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், சீதக்காதி படத்தின் வெளியீட்டிற்குக்குக் காத்துக் கொண்டிருக்கிறார். 

தவிர, சைரா நரசிம்ம ரெட்டி, சூப்பர் டீலக்ஸ், இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாரின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

தற்போது குழந்தைகளின் மனதையும் விஜய் சேதுபதி கவர்ந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகள் அவரிடம், 'நானும் ரவுடி தான்' படத்தின் வசனமான 'ஆர் யூ ஓகே பேபி' என தங்களைக் கேட்கச் சொல்கிறார்கள். அந்த குட்டிக் குழந்தைகளை கொஞ்சி முத்தமிட்டவாறு விஜய் சேதுபதியும் அவ்வாறே கேட்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தைகள் சின்னத்திரை பிரபலங்கள் ராஜ் கமல் - லதா தம்பதியினரின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP