பரபரப்பான நடிப்புக்கு இடையில் பாடல் பாடிய விஜய் சேதுபதி!

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரீஸ் கல்யாண் நடிக்கும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' என்ற படத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் 'சித்தர்' எனத் தொடங்கும் பாடலை பாடியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி
 | 

பரபரப்பான நடிப்புக்கு இடையில் பாடல் பாடிய விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் படு பிஸியான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது பேட்ட, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாரின் படம் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இதில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் 'சீதக்காதி' வரும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் 'பேட்ட' திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில் தற்போது ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரீஸ் கல்யாண் நடிக்கும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' என்ற படத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் 'சித்தர்' எனத் தொடங்கும் பாடலை பாடியிருக்கும் விஜய் சேதுபதி, ஏற்கனவே 'ஹலோ நான் பேய் பேசுறேன்' என்ற படத்தில் இவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் ரெக்கார்டிங் முடிந்திருக்கிறது. 

விஜய் சேதுபதி - காயத்ரி நடிப்பில் வெளியான 'புரியாத புதிர்' என்ற படத்தை இயக்கியவர் தான் ரஞ்சித் ஜெயக்கொடி என்பது கூடுதல் தகவல்!
 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP