கெளதம் கார்த்திக்கிற்காக விஜய் சேதுபதி செய்த விஷயம்!

தேவராட்டம் திரைப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க கெளதம் கார்த்திக் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன் அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

கெளதம் கார்த்திக்கிற்காக விஜய் சேதுபதி செய்த விஷயம்!

சில மாதங்களுக்கு முன்பு வெளியான, மிஸ்டர் சந்திரமௌலி திரைப்படத்திற்குப் பிறகு தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கெளதம் கார்த்திக். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார். இதில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க கெளதம் கார்த்திக் ஒப்பந்தமாகியிருக்கிறார்.  இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்குகிறார். இவர் இயக்குநர் பொன்ராமின் உதவியாளர். இதில் கெளதமுடன் இணைந்து காமெடியில் கலக்கவிருக்கிறார் சூரி. 

படத்திற்கு இன்னும் பெயரிடப் படவில்லை. இதனை ‘வொயிட் லைன் புரொடக்‌ஷன்' நிறுவனம் சார்பில் அன்பழகன் தயாரிக்கிறார். இதன் அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

படத்தில் நடிக்கும் ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த, அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP