ஃபோர்ப்ஸ் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த விஜய் தேவரகொண்டா!

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பல ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா, சர்வதேச அளவில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 30 வயதுக்குள் சாதித்த 30 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
 | 

சர்வதேச வர்த்தக பத்திரிகைகளில் ஒன்றான ஃபோர்ப்ஸ், 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா இடம் பிடித்துள்ளார். தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதைத் தொடர்ந்து ‘மகாநடி’, ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP