இசையாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனியின் பிறந்த நாள் இன்று!

பின்புலம் இல்லாமல் முன்னேறிய அனுபவத்தை மறக்காத விஜய் ஆண்டனி தன்னுடைய இசையமைப்பில் உருவாகும் படங்களில் பெரும்பாலான புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பின்னனிப் பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டுள்ள விஜய் ஆண்டனியின் 44 வது பிறந்த நாள் இன்று( 24 ஜூலை).
 | 

இசையாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனியின் பிறந்த நாள் இன்று!

இசையமைப்பாளராக இருந்து தன்னுடைய தன்னிகரில்லா நடிப்பு திறமையால் ரசிகர்களை வசீகரித்தவர் விஜய் ஆண்டனி. இவர் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் (ஜுலை 24, 1975ம் ஆண்டு) பிறந்தவர். தனது 7வயதில் தந்தையை இழந்த இவர், துவண்டு போகாமல் கல்லூரி படிப்பை முடித்த கையோடு தனக்கு மிகவும் பிடித்த துறையான இசை துறை சார்ந்த ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவி தொலைக்காட்சிகளுக்கும், ஆவணப்படங்களுக்கும் இசையமைத்து வந்துள்ளார்.

இவரது திறமைக்கு கிடைத்த முதல் பரிசுதான் ’சுக்ரன்’ என்னும் திரைப்படம்.  எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வெற்றியை பெற்றுக்கொடுத்தன. இதை தொடர்ந்து, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க துவங்கினார் விஜய் ஆண்டனி.

இசையாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனியின் பிறந்த நாள் இன்று!

பின்புலம் இல்லாமல் முன்னேறிய அனுபவத்தை மறக்காத விஜய் ஆண்டனி தன்னுடைய இசையமைப்பில் உருவாகும் படங்களில் பெரும்பாலான புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். இசை திறமையோடு நடிப்புத்திறமையையும் தன்னுள் கொண்டிருந்த விஜய் ஆண்டனி ’நான்’ என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இசையாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனியின் பிறந்த நாள் இன்று!

அதன் பிறகு இவர் நடித்த சலீம், எமன், காளி, பிச்சைக்காரன், கொலைகாரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வித்யாசமான கதைக்களத்தை கொண்டவையாக அமைந்து, திரைத்துறையில் விஜய் ஆண்டனிக்கு தனி ஒரு இடத்தை தக்கவைத்து கொடுத்தன.  இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பின்னனிப் பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டுள்ள விஜய் ஆண்டனியின் 44 வது பிறந்த நாள் இன்று( 24 ஜூலை).

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP