வரலட்சுமியின் வெல்வெட் நகரம் ட்ரைலர்!

சர்கார் படத்தில் கோமளவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது வெல்வெட் நகரம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் ட்ரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டு உள்ளார்.
 | 

வரலட்சுமியின் வெல்வெட் நகரம் ட்ரைலர்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழில் பரபரப்பான நடிகையாகி விட்டார். சமீபத்தில் இவர் நடித்திருந்த சர்கார் வெளியாகி, ரசிகர்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. தற்போது வெல்வெட் நகரம், அம்மாயி, மாரி 2, கன்னிராசி, நீயா 2, சக்தி, பாம்பன், த அயர்ன் லேடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இதில் வெல்வெட் நகரம் திரைப்படத்தை மனோஜ்குமார் நடராஜன் இயக்கியுள்ளார். வரலட்சுமி பத்திரிக்கையாளராக நடிக்கும் இந்தப் படத்தில் ரமேஷ் திலக், மாளவிகா சுந்தர், கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இதனை 'மேக்கர்ஸ் ஸ்டுடியோ' நிறுவனம் சார்பில் அருண் கார்த்திக் தயாரித்துள்ளார். தற்போது இதன் ட்ரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP