`உறியடி 2'  இசை வெளியீட்டு விழா:

எனக்கு ஒரு நடிகருடைய பையன் என்கிற அடையாளம் இருக்கு. ஆனால், எதுவுமே இல்லாமல் உறியடிங்கிற படத்தை விஜயகுமாரால எப்படிக் கொடுக்க முடிஞ்சதுனு ,எனக்கு பிரமிப்பு இருந்தது: சூர்யா பேசிய வீடியோ உள்ளே..
 | 

`உறியடி 2'  இசை வெளியீட்டு விழா:

சூர்யா தயாரிப்பில் விஜய்குமார் இயக்கி நடிக்கும் , `உறியடி 2'  படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அதில் விஜய் குமார், சூர்யா, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், எடிட்டர் லினு, மற்றும்  டெக்னிக்கல் டீம் உள்ளிட்டோர்   கலந்துகொண்டனர். 

இவ்விழாவில்  பேசிய நடிகர் சூர்யா:  நான் `உறியடி' படம் பார்த்தேன். எனக்கு ஒரு நடிகருடைய பையன் என்கிற அடையாளம் இருக்கு. ஆனால், எதுவுமே இல்லாமல் உறியடிங்கிற படத்தை விஜயகுமாரால  எப்படிக் கொடுக்க முடிஞ்சதுனு ,எனக்கு பிரமிப்பு இருந்தது.

இது வெறும் திரைதான். இதுல ஒரு நிஜமான விஷயம் வந்துச்சுன்னா அதுக்கு ஆயுள் ரொம்ப ஜாஸ்தி. அந்த மாதிரியான ஒரு நிஜம்தான் உறியடி முதல் பாகம்  என கூறினார்.

`உறியடி 2'  இசை வெளியீட்டு விழா:

மேலும் பேசிய அவர்: இந்தப் படம் நிறைய பேருக்கு போய்ச் சேரணும். `உறியடி 2' படத்துடைய பேனர்ல சின்னதா சூர்யாவும் 2டியும் வர்றது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் ரொம்ப தாக்கத்தைக் கொடுக்கும். எப்பவும் போல உங்களுடைய நியாயமான தீர்ப்பைக் கொடுங்க. நன்றி" என பேசியுள்ளார். இந்த வீடியோவை சூர்யாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP