’நரகாசூரன்’ படத்துக்கு U/A  

அரவிந்த்சாமி நடித்திருக்கும் 'நரகாசூரன்' படத்துக்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
 | 

’நரகாசூரன்’ படத்துக்கு U/A  

அரவிந்த்சாமி நடித்திருக்கும் 'நரகாசூரன்' படத்துக்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர்.   

நடிகர் ரகுமான் கதையின் நாயகனாக நடித்த 'துருவங்கள் 16' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், தற்போது,‘நரகாசூரன்’என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் கவுதம் மேனன் தயாரித் திருக்கிறார். இதில் அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். 

’நரகாசூரன்’ படத்துக்கு U/A  

திகில் பின்னணியில் உருவாகியிருக்கும் 'நரகாசுரன்' படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்தது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, போஸ்ட் புரடெக்‌ஷன்  பணிகளும் நிறைவடைந்திருக்கிறது. 

இதையடுத்து, ரிலீசுக்கு தயாராக இருக்கும் ’நரகாசூரன்’ படத்தை, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடம் ஓடும் இந்தப் படத்துக்கு தணிக்கை குழுவினர், U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆகவே, இந்த சென்சார் சான்றிதழை தயாரிப்பாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுவிடம் காட்டி, ரிலீஸ் தேதியை உறுதி செய்ய உள்ளனர்.     
Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP