இவ்வளவு ஆபாசமா படத்தோட ட்ரைலரா? சென்சார் அதிகாரிகள் என்ன செய்வார்கள்?

தமிழ் சினிமாவுக்கென்று ஒரு சில கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், சமீப காலமாக அந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது.
 | 

இவ்வளவு ஆபாசமா படத்தோட ட்ரைலரா? சென்சார் அதிகாரிகள் என்ன செய்வார்கள்?

தமிழ் சினிமாவுக்கென்று ஒரு சில கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், சமீப காலமாக அந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது. 

சமீபத்தில் ஓவியா நடிப்பில் வெளியான 90 எம்.எல் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ட்ரைலர் வெளியானது முதற்கொண்டு ஆபாச காட்சிகள் நிறைந்திருப்பதாக கூறி பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த படத்தை கண்டு ரசிகர்களே சற்று அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், தற்போது, 90 ML பட பாணியில் லாலிபாப்ஸ் என்ற ஒரு புது படம் உருவாகியுள்ளது. இதில், குடும்ப பெண்ணாக நடித்து வந்த நடிகை தன்யா இதில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் நடித்துள்ளார். 

இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலரில் நொடிக்கு நொடி ஆபாச வசனம், ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பது அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக தன்யா ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். படத்தின் ட்ரைலர் காட்சிகளிலேயே இத்தனை ஆபாசங்களும், இரட்டை அர்த்த வசனங்களுக்கும் இருந்தால், படம் எப்படியிருக்கும்? சென்சார் அதிகாரிகள் இந்த காட்சிகளுக்கு எல்லாம் கத்திரி போடுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீப நாட்களில், இணையதளங்களில் சென்சார் செய்யப்படாமலேயே வீடியோக்களை வெளியிடும் போக்கு இருந்து வருவதால், பலரும் இணையதளங்களுக்கென ஆபாசக் காட்சிகளுடன் கூடிய வீடியோக்களை தங்களது படங்களுக்கு முன்னோட்டமாக வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ், நடிகைக்கு முத்தங்களைக் கொடுக்கும் காட்சிகளையும், கெட்ட வார்த்தைகளை உச்சரிக்கும் வசனங்களையும் கொண்ட வீடியோவை ரொம்பவும் பெருமையாக இணையதளத்தில் வெளியிட்டு கலை சேவை (!?) செய்தது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP