இவர் தான் ரஜினி வீட்டு மாப்பிள்ளை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ம் தேதி நடக்க உள்ள நிலையில் செளந்தர்யா மற்றும் விசாகன் வணங்காமுடி ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
 | 

இவர் தான் ரஜினி வீட்டு மாப்பிள்ளை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ம் தேதி நடக்க உள்ள நிலையில் செளந்தர்யா மற்றும் விசாகன் வணங்காமுடி ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை 2010ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வேத் என்று பெயரிட்டனர். இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, ஒருமித்த கருத்து அடிப்படையில், சென்னை மாவட்ட முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் விவகாரத்து பெற்றனர். 

இந்நிலையில் சௌதர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விசாகனும் விவாகரத்து பெற்றவர். 

இவர் தான் ரஜினி வீட்டு மாப்பிள்ளை!

விசாகன் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார். திமுக பிரமுகர் சூலூர் வணங்காமுடியின் மகன் ஆவார்.  சௌந்தர்யா மற்றும் விசாகன் திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடக்க உள்ளது. 

இவர் தான் ரஜினி வீட்டு மாப்பிள்ளை!

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் திருமண அழைப்பிதழும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP