திக்.. திக்... நிமிடங்களுடன் டாப்ஸி: ட்ரைலர் உள்ளே

'கேம் ஓவர்' படத்தின் ட்ரைலரில் தனிமையில் வசிக்கும் இளம் பெண், சமூக த்தில் நடைபெறும் இளம் பெண்களின் கொலைகளால் மனதளவில் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகி, பயப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
 | 

திக்.. திக்... நிமிடங்களுடன் டாப்ஸி: ட்ரைலர் உள்ளே

நயன்தாரா நடித்த  `மாயா' படத்தை தொடர்ந்து  அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் 'கேம் ஓவர்' ஆகும்.  இந்தப் படத்தில் 'டாப்ஸி' கதாநாயகியாக நடித்துள்ளார். `இறுதிச் சுற்று படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ரோன் எத்தன்  இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த படம் 90 களில் பிரபலமாக இருந்த சிப் கேம்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  

சமீபத்தில்,த்ரில்லராக உருவாக்கியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில் இதன் ட்ரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.  இதன் ட்ரைலரில் தனிமையில் வசிக்கும் இளம் பெண், சமூகத்தில் நடைபெறும் இளம் பெண்களின் கொலைகளால் மனதளவில் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகி பயப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வீடியோ கேம் விளையாட்டை மையமாக வைத்து ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள கேம் ஓவர் திரைப்படம் வரும் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP