பணத்தை திருப்பி கொடுத்ததுடன் வெகுமதியையும் ஏற்க மறுத்த சூப்பர் ஹீரோ !

நேர்மை என்ற சொல்லுக்கு உரித்தான மனிதராக வாழ்ந்து காட்டியுள்ளார் மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த 54 வயதான ஜக்தேல்.
 | 

பணத்தை திருப்பி கொடுத்ததுடன் வெகுமதியையும் ஏற்க மறுத்த சூப்பர் ஹீரோ !

நேர்மை என்ற சொல்லுக்கு உரித்தான மனிதராக வாழ்ந்து காட்டியுள்ளார் மகாராஷ்டிராவின் சதாராவைச் சேர்ந்த 54 வயதான ஜக்தேல்.  இவர் கடந்த தீபாவளி பண்டிகை அன்று டஹிவாடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது தரையில் ஒரு பை  கிடப்பதை கண்டுள்ளார். 

அதனை எடுத்து பார்த்த பொழுது பை முழுவதும் பணமாக இருந்துள்ளது. பின்னர் அந்த பையை தவறவிட்ட நபரை  கண்டறிந்து  பணப்பையை ஒப்படைத்துள்ளார். இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அந்த நபர் தன்னுடைய மனைவியின் மருத்துவ செலவிற்க்காக சேர்த்த ரூபாய். 40,000 ரூபாயை இந்த பையில் வைத்துள்ளதாக கூறி பணத்தை திருப்பி கொடுத்த   ஜக்தேலுக்கு ரூபாய் .1000 த்தை வெகுமதியாக அளித்துள்ளார். ஆனால் ஜக்தேல் அதனை வாங்க மறுத்து பயண  செலவிற்க்கா ரூபாய். 7 யை மட்டும் வாங்கி கொண்டுள்ளார்.  

பணத்தை கண்டெடுத்த  பொழுது ஜக்தேலிடம்  வெறும் ரூபாய்.3 மட்டுமே இருந்துள்ளது. பின்னர் இவரின் நேர்மையை  அறிந்த எம்.எல்.ஏ சிவேந்திரராஜே போசாலே மற்றும் பிற அமைப்புகள் ஜக்தேலின் நேர்மையை பாராட்டியுள்ளன. இருப்பினும், ஜக்தேல் தனது நேர்மையான நடத்தைக்கு எந்தவொரு பண வெகுமதியையும் ஏற்க மறுத்துவிட்டார். அதோடு ஜக்தேலின் நேர்மையால் ஈர்க்கப்பட்ட, அமெரிக்காவில் வசிக்கும் ராகுல் பார்க், ரூ .5 லட்சம் கொடுக்க முன்வந்துள்ளார், ஆனால் அந்த பணத்தை பெற அஜக்தேல் மறுத்துவிட்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP