விரைவில் வெளியாகும் எனை நோக்கி பாயும் தோட்டா!

இயக்குநர் கெளதம் மேனன் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் படம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது
 | 

விரைவில் வெளியாகும் எனை நோக்கி பாயும் தோட்டா!

இயக்குநர் கெளதம் மேனன் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், விண்ணைத் தாண்டி வருவாயா - 2 ஆகியப் படங்களில் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதில் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் தமிழில் அறிமுகமாகிறார். 

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடித்திருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கெளதம் மேனன் இதனைத் தயாரித்திருக்கிறார். தர்புகா சிவாவின் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. 

இந்நிலையில் தீபாவளிக்கு இந்தப்படம் ரிலீஸாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்‌ஷன்கள் நடந்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில், படத்தை சென்சாருக்கு அனுப்ப இருக்கிறார்களாம் படக்குழுவினர். ஆகையால், விரைவில் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸாகும் என்கிறார்கள் கெளதம் மேனன் ரசிகர்கள்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP