பாக்கியராஜின் ராஜினாமவை ஏற்றுக்கொள்ள முடியாது - SWAN

Reply for Bakyaraj's resignation from SWAN
 | 

பாக்கியராஜின் ராஜினாமவை ஏற்றுக்கொள்ள முடியாது - SWAN

தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து இயக்குநர் பாக்யராஜ் ராஜினாமா செய்துக் கொள்வதாகவும், அதற்கான அறிக்கையும் காலை வெளியிட்டார். 

சமீபத்தில் எழுந்த சர்கார் பிரச்னையின் தனக்கு நிறைய அசெளகரியங்கள் ஏற்பட்டதாகவும் அதில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அவரின் ராஜினாமாவை ஏற்கமுடியாது என தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது. பாக்யராஜ் ராஜினாமா செய்துக் கொள்வதாக செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தார். ஆனால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பாக்கியராஜின் ராஜினாமவை ஏற்றுக்கொள்ள முடியாது - SWAN

அவரே தலைவராகத் தொடர்ந்து, சேவையாற்ற வேண்டும் என உறுப்பினர்கள் விரும்புவதால், திரு பாக்யராஜ் அவர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என, பாக்யராஜின் ராஜினாமாவுக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP