'8 தோட்டாக்கள்' படக் குழுவின்  அடுத்த தயாரிப்பு  ’ஜீவி' விரைவில் திரைக்கு வர உள்ளது

'8 தோட்டாக்கள்' படக் குழுவின் அடுத்த தயாரிப்பு ’ஜீவி' விரைவில் திரைக்கு வர உள்ளது. திரில்லர் பாணியில் உருவாகும் ’ஜீவி' திரைப்படம் ஜூன் 28ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 | 

'8 தோட்டாக்கள்' படக் குழுவின்  அடுத்த தயாரிப்பு  ’ஜீவி' விரைவில் திரைக்கு வர உள்ளது

தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டைப் பெற்ற '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வெற்றிவேல், சரவணா சினிமாஸ், வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக 'ஜீவி' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில்,’ 8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த 'வெற்றி' கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி,ரோகிணி, ரமா ஆகியோர் நடித்துள்ளனர். பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள ஜீவி திரைப்படத்தை  புதுமுக இயக்குநர் வி.ஜெ.கோபிநாத் இயக்குயுள்ளார். திரில்லர் பாணியில் உருவாகும் ’ஜீவி' திரைப்படம் ஜூன் 28ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP