விஸ்வாசம் திரைப்படம் இப்படி தான் உருவானது: வீடியோ வெளியீடு!

இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 | 

விஸ்வாசம் திரைப்படம் இப்படி தான் உருவானது: வீடியோ வெளியீடு!

விஸ்வாசம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அஜித் - சிவா கூட்டணியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP