இன்று மாலை வெளியாகிறது அசுரன் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குனர் வெற்றிமாறனுடன் மீண்டும் கைகோர்த்து நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.
 | 

இன்று மாலை வெளியாகிறது அசுரன் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குனர் வெற்றிமாறனுடன் மீண்டும் கைகோர்த்து நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 வெளியாகிறது. 

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 'வடசென்னை' படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படம், இரு தினங்களுக்கு முன் வெளியானது. தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்கமறு உள்ளிட்ட 4 படங்களுக்கு இடையே வெளியானாலும், மாரி 2,  நல்ல வசூலை குவித்தது.

அந்த உற்சாகத்தில் இருந்த தனுஷ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார். இயக்குனர் வெற்றிமாறனுடன் மீண்டும் கைகோர்க்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு அசுரன் என பெயர் வைத்திருப்பதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். 

 

 

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP