கடைசி தலைவர் கலைஞர் தான்: கருணாநிதி மறைவுக்கு இசைஞானியின் இரங்கல் வீடியோ

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 | 

கடைசி தலைவர் கலைஞர் தான்: கருணாநிதி மறைவுக்கு இசைஞானியின் இரங்கல் வீடியோ

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இளையராஜா, கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், "தமிழ் பெருங்குடி மக்களே... டாக்டர் கலைஞர் அவர்கள் மறைந்தது நமக்கெல்லாம் துக்க தினமே தான். இந்த துக்கத்தை எப்படி நாம் மாற்றிக் கொள்ள போகிறோம். எப்படி நாம் திரும்பி வர போகிறோம் என்று தெரியவில்லை. அரசியல் தலைவர்களில் கடைசி தலைவர் ஐயா தான். சினிமா துறையில் சுத்தமான தமிழில் வசனம் எழுதிய கடைசி திரைக்கதை, வசனகர்த்தா என்று சொல்லும் அளவுக்கு அவர் எழுதி இருக்கிறார். 

அரசியலாகட்டும், கலையாகட்டும், இலக்கியமாகட்டும், தமிழாகட்டும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய கலைஞர் அவர்களின் மறைவு நமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும.  இந்த தினத்தில் ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்துள்ளளேன். இந்த நிகழ்ச்சி ஆறு மாதத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP