சின்ன பட்ஜெட்டில் உருவான பெரிய படம்

10 இலட்சம் ரூபாயை மட்டுமே பட்ஜெட்டாக கொண்டு உருவான 'ழகரம்' படத்தில் நடித்த நடிகர்கள் யாரும் சம்பளம் பெறாமல் நடித்து கொடுத்துள்ளனாராம். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 12ல் திரைக்கு வர உள்ளது.
 | 

சின்ன பட்ஜெட்டில் உருவான பெரிய படம்

ஈரம், அதிதி, அனந்தபுரத்து வீடு உள்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த நடிகர் நந்தா ஹீரோவாக  நடித்துள்ள திரைப்படம் 'ழகரம்'. தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு 'ழகர‌' எழுத்தை  டைட்டிலாக கொண்ட இப்படத்தை, அறிமுக இயக்குனர் க்ரிஷின் இயக்கியுள்ளார்.  10 இலட்சம் ரூபாயை மட்டுமே பட்ஜெட்டாக கொண்டு உருவான இந்த படத்தில் நடித்த நடிகர்கள் யாரும் சம்பளம் பெறாமல் நடித்து கொடுத்துள்ளனாராம்.

மேலும்  புதையலை தேடும் ஒரு இளைஞர் கூட்டத்தின் கதையை மையமாக கொண்ட 'ழகரம்' திரைப்படத்திற்கு பரத்வாஜ்,பிரின்ஸ், உள்ளிட்ட மூவர் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 12ல் திரைக்கு வர உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP