சீனாவில் வெளியாக உள்ள ஷங்கரின் பிரமாண்ட படம்

சீனாவில் 2.0 படத்திற்கான தணிக்கை முடிவடைந்துள்ளதால், விரைவில் அந்நாட்டில் 2.0 திரையிடப்பட உள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 | 

சீனாவில் வெளியாக உள்ள ஷங்கரின் பிரமாண்ட படம்

ரஜினிகாந்த் நடிப்பில்  ஷங்கர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் 2.0 இதில்  அக்ஷய் குமார் வில்லன் ஆத்மாவாக நடித்திருந்தார்.  3-டி தொழில்நுட்பம் முறையிலும், 2 டி முறையிலும் உருவாகியிருந்த இந்த படம்  கிட்டத்தட்ட 800 கோடி ரூபாயை பாக்ஸ்ஆபிஸ் வசூல் ரீதியில் குவித்திருந்தது.

மேலும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான 2.0 திரைப்படம் சீனா, ஜப்பான் தவிர மற்ற நாடுகளில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சீனாவில் 2.0 படத்திற்கான தணிக்கை முடிவடைந்துள்ளதால் விரைவில் அந்நாட்டில் 2.0 திரையிடப்பட உள்ளதாக, இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP