பிங் வண்ண உடையுடனான புகைப்படத்தை பதிவிட்டு நன்றி கூறிய த்ரிஷா

தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ள த்ரிஷா, உங்களது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும், எனது வயதில் பத்து வருடங்களை குறைத்துவிட்டது. என பதிவிட்டதுடன், வித்தியாசமான முறையில் தைக்கப்பட்ட பிங் வண்ணத்தில் உள்ள உடையணிந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
 | 

பிங் வண்ண உடையுடனான புகைப்படத்தை பதிவிட்டு நன்றி கூறிய த்ரிஷா

கடந்த 4ம் தேதி த்ரிஷா  தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடினார், இவரின் பிறந்த நாளை ஒட்டி திரைத்துறையினர், நணபர்கள், ரசிகர்கள் என பலதரப்பினர் த்ரிஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இணைய தளத்தில் பதிவிட்டு வந்தனர்.

அதன்படி நடிகை குஷ்பு கூறிய பிறந்த நாள் வாழ்த்து செய்தியில்:, அழகான மனிதர்கள், வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள், அவர்களில் நீயும் ஒருத்தி, என பதிவிட்டிருந்தார்.  இந்த பதிவிற்கு பதில் அளித்த த்ரிஷா, நீங்களும் மிக அழகானவர்தான் என கருத்திட்டிருந்தார்.

 

 

இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இவரின் இயக்கத்தில் மங்காத்தா திரைப்படத்தில் த்ரிஷா நடித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவிட்டிருந்த நடிகை சார்மி, த்ரிஷாவை தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஒரே பாலின திருமணம் சட்டப்படி ஏற்றுக்கொள்ள பட்டுவிட்டது எனவும் கருத்திட்டிருந்தார். இந்த பதிவிற்கு பதில் கூறிய த்ரிஷா, தான் ஏற்கனவே உன்னை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டேனே, என பதில் கூறியிருந்தார். இந்த பதிவு சர்ச்சை யை ஏற்படுத்தியது.

 

 

த்ரிஷாவின் தோழி மணிமொழி என்பவர் புளுகிராஸில் உள்ள நாயுடன் கேக் வெட்டி த்ரிஷாவின் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு நன்றி கூறியிருந்தார் திரிஷா. விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவில் த்ரிஷாவும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ள த்ரிஷா, உங்களது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்,  எனது வயதில் பத்து வருடங்களை குறைத்துவிட்டது. என பதிவிட்டதுடன்,   பிங் வண்ணத்தில் உள்ள உடையணிந்த புகைப்படத்தையும்  பதிவிட்டுள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP