அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை! - ராட்சசி ட்ரைலர்

மெத்தனமாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக செயல்பட்டு, மாணவர்களை நல்வழிப்படுத்தும் நல்லாசிரியரின் கதையாக 'ராட்சசி' படம் இருக்கும் என்பதை இதன் ட்ரைலர் மூலம் அறிய முடிகிறது.
 | 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை! - ராட்சசி ட்ரைலர்

அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கும் 'ராட்சசி' படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தில், ஜோதிகா அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார்.  இதில், பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மெத்தனமாக இருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக செயல்பட்டு, மாணவர்களை நல்வழிப்படுத்தும் நல்லாசிரியரின் கதையாக இந்த படம் இருக்கும் என்பதை படத்தின் ட்ரைலர் மூலம் அறிய முடிகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP