தனிக்காட்டு ராஜாடா நம்மாளு: வெளியானது மாரி கெத்து பாடல்!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள மாரி 2 படத்தின் இரண்டாவது சிங்கிளான மாரி கெத்து பாடல் வெளியானது. செம கெத்தாக வந்துள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவே எழுதி இசையமைத்துள்ளார்.
 | 

தனிக்காட்டு ராஜாடா நம்மாளு: வெளியானது மாரி கெத்து பாடல்!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள மாரி 2 படத்தின் இரண்டாவது சிங்கிளான மாரி கெத்து பாடல் வெளியானது. 

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகமான மாரி 2 தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. கிருஸ்துமஸ் ரேசில் உள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்ரபை கூட்டி உள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இதனை தனுஷின் வண்டர்பார் மூவிஸ் தயாரித்து உள்ளது.  மேலும் முதல் படத்தில் அனிருத் தர லோக்கலாக இசையமைத்திருப்பார். ஆனால் இந்த படத்தில் அனிருத்தை கழட்டிவிட்டு யுவன் சங்கர் ராஜாவை தேர்வு செய்துள்ளார்கள். 

 

 

யுவனும் தனுசும் சேர்ந்தாலே ஹிட் தானே... அந்த வகையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக்கான ரவுடி பேபடி வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக டிக்டாக்கில் லட்சக்கணக்கானோர் இந்த பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது மாரிக்கெத்து என்ற இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவே எழுதி இசையமைத்துள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, சின்ன பொண்ணு, தனுஷ் மற்றும் மகாலிங்கம் ஆகியோர் பாடி உள்ளனர்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP