‘சிவாஜி பிறந்தநாளை உதாசீனப்படுத்திய நடிகர்களை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது’

நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை ஏனோ தானோவென்று அணுகியதாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிவாஜி சமூகநலப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
 | 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் உள்ள சிவாஜி சிலைக்கு அவரது மகன் பிரபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை தென்னிந்திய நடிகர் சங்கம் பெரிதாக கொண்டாடவில்லை என்று கூறி, சிவாஜி சமூகநலப் பேரவை, நடிகர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான சிவாஜி சமூகநலப் பேரவை,‘ நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாளை தென்னிந்திய நடிகர் சங்கம் ஏனோ தானோவென்று அணுகியது கண்டனத்திற்குரியது.சிவாஜி கணேசனின் பிறந்த நாளை தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் கொண்டாடுவார்களா?.சிவாஜி பிறந்தநாளை உதாசீனப்படுத்திய நடிகர்கள், கலைஞர்கள் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது. ஏற்கனவே ஜூலை 21ஆம் தேதி சிவாஜியின் நினைவுநாள் என்பதையே நடிகர் சங்கம் மறந்துபோனது’ என்று குறிப்பிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP