'கண்கள் இரண்டால்' மயக்கிய ஸ்வாதிக்கு திடீர் கல்யாணம்!

இயக்குநர் மற்றும் நடிகர் சசிக்குமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி.
 | 

'கண்கள் இரண்டால்' மயக்கிய ஸ்வாதிக்கு திடீர் கல்யாணம்!

இயக்குநர் மற்றும் நடிகர் சசிக்குமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் ஸ்வாதி. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிறகு போராளி, இதற்குத்தானே ஆசைப்பாட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை ஆகியப் படங்களில் நடித்திருந்தார். ஆனால் எதிர் பார்த்த அளவு அவரால் ஜொலிக்க முடியவில்லை. அவ்வப்போது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்தார். 

கடைசியாக தமிழில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்கு லண்டன் பப்ளு எனப் பெயரிடப் பட்டிருந்தது. அதன் பிறகு படங்கள் எதுவும் இல்லாமல் சைலன்ட் மோடில் இருந்த ஸ்வாதிக்கு தற்போது திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. விகாஸ் என்கிற சர்வதேச விமான ஓட்டியை கைப்பிடிக்கிறார். இவர்களது திருமணம் வருகிற 30-ம் தேதி ஹைதரபாத்தில் நடக்கிறது. கொச்சினில் செப்டம்பர் 2-ம் தேதி வரவேற்பும் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. காதல் திருமணமான இதில் இருவரது உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துக் கொள்கிறார்களாம். 

'கண்கள் இரண்டால்' மயக்கிய ஸ்வாதிக்கு திடீர் கல்யாணம்!

விகாஸ் இந்தோனேஷியாவிலுள்ள ஜகார்தாவைச் சேர்ந்தவர், அதனால் திருமணத்திற்குப் பிறகு ஸ்வாதியும் அங்கேயே செட்டில் ஆகிறாராம். 

இதைப் படிச்சீங்களா?

பாரத ரத்னா யாருக்கு? கருணாநிதி - ஜெயலலிதா இறந்தும் தொடரும் சண்டை...

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP