வாகன ஓட்டிகள் 150 பேருக்கு ஹெல்மெட் வழங்கிய சூர்யா ரசிகர்கள்

திருத்தணியில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் வாகன ஓட்டிகள் 150 பேருக்கு ஹெல்மெட் வழங்கியுள்ளனர்.
 | 

வாகன ஓட்டிகள் 150 பேருக்கு ஹெல்மெட் வழங்கிய சூர்யா ரசிகர்கள்

திருத்தணியில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் வாகன ஓட்டிகள் 150 பேருக்கு ஹெல்மெட் வழங்கியுள்ளனர்.

சென்னையில் பேனர் விழுந்து, அதனால் ஏற்பட்ட விபத்தில், இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் ’காப்பான்’ திரைப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், பேனர், கட் அவுட் எதுவும் வைக்காமல், சூர்யாவின் ரசிகர் மன்றம் சார்பாக வாகன ஓட்டிகள் 150 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. இது வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக, நெல்லை மாவட்ட சூர்யா ரசிகர்கள் 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP