Logo

விஷால் தொகுத்து வழங்கும் 'சன் நாம் ஒருவர்' ப்ரோமோ 2

விஷால் தொலைக்காட்சிக்கும் என்ட்ரியாகிறார். சன் டிவி-யில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார் அவர். சமீபத்தில், இதன் ப்ரோமோ ஒன்றும் வெளியிடப் பட்டது. தற்போது இதன் இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது
 | 

விஷால் தொகுத்து வழங்கும் 'சன் நாம் ஒருவர்' ப்ரோமோ 2

இரும்புத்திரை படத்துக்குப் பிறகு நடிகர் விஷால் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை வரும் அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். அதோடு இயக்குநர் வெங்கட் மோகனின் ‘அயோக்யா’ மற்றும் இயக்குநர் சுந்தர்.சி-யின் பெயரிடாதப் படம் ஆகிவற்றிலும் கமிட் ஆகியிருக்கிறார். 

இதில் ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு (2019) பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது இந்தப் படம். அதன் பிறகு சுந்தர்.சி படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிடப் பட்டுள்ளதாம். 

இந்நிலையில் விஷால் தொலைக்காட்சிக்கும் என்ட்ரியாகிறார். சன் டிவி-யில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார் அவர். சமீபத்தில், இதன் ப்ரோமோ ஒன்றும் வெளியிடப் பட்டது. 

தெலுங்கில் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய ‘மேமு சைத்தம்’ என்ற நிகழ்ச்சியைத் தான் தமிழில் விஷால் தொகுத்து வழங்குகிறாராம். 

தற்போது இதன் இரண்டாவது ப்ரோமோவையும் சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ‘சன் நாம் ஒருவர்’ எனப் பெயரிடப் பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவில், "நமக்காக ஒருத்தர் வருவாங்கன்னு எதிர்ப்பார்க்காதீங்க, நாமளே அந்த ஒருத்தரா மாறுவோம்" என்கிறார் விஷால். 

newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP