ஸ்டைலீஷ் ரஜினி, ப்யூட்டி நயன்! பட்டையைக் கிளப்பும் தர்பார் ட்ரைலர்!

ஸ்டைலீஷ் ரஜினி, ப்யூட்டி நயன்! பட்டையைக் கிளப்பும் தர்பார் ட்ரைலர்!
 | 

ஸ்டைலீஷ் ரஜினி, ப்யூட்டி நயன்! பட்டையைக் கிளப்பும் தர்பார் ட்ரைலர்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் டிரைலர் அறிவித்தப் படி குறித்த நேரத்தில் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்களைக் காக்க வைத்ததற்கு மிகப் பெரிய விருந்தை படைத்திருக்கிறது தர்பார் ட்ரைலர்.

படையப்பா, மூன்று முகம் உள்ளிட்ட பழைய படங்களில் வரும் கெத்தான, ஸ்டைலான ஹீரோவாக மீண்டும் அவதாரம் எடுத்திருக்கிறார் ரஜினி. மும்பை மாநகரத்தின் கமிஷனராக வலம்  வருகிறார் ரஜினிகாந்த். 
ஆதித்யா அருணாச்சலம் கமிஷ்னர் ஆஃப் மும்பை எனக் கெத்தா ஸ்டைலா தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ரஜினி. தர்பார் படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம் என சொன்ன ஏ.ஆர் முருகதாஸ் இந்த ட்ரைலரை செதுக்கிய விதத்திலிருந்து  படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

ஸ்டைலீஷ் ரஜினி, ப்யூட்டி நயன்! பட்டையைக் கிளப்பும் தர்பார் ட்ரைலர்!

80-90 கால ரஜினியின் நடிப்பை அப்படியே திரையில் மீண்டும் பார்ப்பது போல் ஒரு பிரமிப்பை இயக்குனர் ஏற்படுத்தியுள்ளார். மாஸ் வசனம், அவருக்கே உரிய ஸ்டைல், காதல், ரொமேன்ஸ் என மக்கள் காதலித்த ரஜினி மீண்டும் தர்பார் மூலம் வெளிவந்துள்ளார்.
ஒரிஜினலாவே நான் வில்லம்மா போன்ற வசனங்களை அள்ளித் தெளித்ததோடு நயன்தாரா திரையில் தோன்றும் காட்சிகள் அமர்களப்படுத்துகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP