மாதவன் நடிக்கும் நம்பி நாரயணனின் கதை!

கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் பொய் வழக்கை மையப்படுத்தி ராக்கெட்ரி என்ற படம் தயாராகிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் நடிகர் மாதவன் நடிக்கும் இதன் டீசர் வரும் 31-ம் தேதி காலை 11.33 மணிக்கு வெளியாகிறது.
 | 

மாதவன் நடிக்கும் நம்பி நாரயணனின் கதை!

கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன் இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர். 1994-ல் இவர் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1996-ல் இந்த வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டது. கடைசியாக 1998-ல் இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, நம்பியை விடுதலை செய்தது. 

சமீபத்தில் நம்பி நாராயணனின் வழக்கு முடிவுக்கு வந்து, அதில் வெற்றி பெற்ற நம்பிக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. 

அந்த சம்பவத்தை 'Ready to fire: How India and I survived the ISRO spy case' என புத்தகமாக எழுதியுள்ளார் நம்பி. இந்த சர்ச்சைக்குரிய கதையை படமாக்க இயக்குநர் ஆனந்த் மகாதேவன் விருப்பம் தெரிவிக்க, அதற்கு நம்பியும் ஒப்புக் கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் இந்தப்படத்தில் நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கிறார். 

'ராக்கெட்ரி' என  பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் டீசர் வரும் 31-ம் தேதி காலை 11.33 மணிக்கு வெளியாகும் தகவலை மாதவன் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் கதையின் நாயகன் நம்பி நாராயணன் கலந்துக் கொள்ளும் செய்தியையும் அவர் உறுதிப் படுத்தியுள்ளார். 

இதனை திரையில் காண ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்!

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP