உலக மயமாக்கலின் பாதிப்பை விவரிக்கும் பரணியின் 'குச்சி ஐஸ்' : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

குச்சி ஐஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 | 

உலக மயமாக்கலின் பாதிப்பை விவரிக்கும் பரணியின்  'குச்சி ஐஸ்' : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

பிக்பாஸ் புகழ் "நாடோடிகள் பரணி" நடிப்பில் உருவாகியுள்ள  'குச்சி ஐஸ்'  திரைப்படத்தை ஜெயபிரகாஷ் இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தை ஜெயபாலன் தயாரித்துள்ளார்.  உலக மயமாக்கல் காரணமாக ஏற்படும் தாக்கம் குறித்ததான சிந்தனைகளுடன் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கே.எஸ்.பழனி ஒளிப்பதிவு  மேற்கொள்ளவும், தோஷ் நந்தா இசையமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு  பணியாற்றியுள்ளனர். 

மேலும்  'குச்சி ஐஸ்' திரைப்படத்தில் பரணிக்கு ஜோடியாக புதுமுக நாயகி  ரத்திகா நடித்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலர் நடித்துள்ள குச்சி ஐஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் பசுமையான பூமியை கீழிலிருந்து வரும் நெருப்புக் குழம்பு அழிப்பது போன்ற  காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP