பூஜையுடன் தொடங்கிய சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் புதிய படத்தின் ஷூட்டிங்: இசை, இயக்குநர், ஹீரோயின் யார் தெரியுமா?

தனது சரவணா ஸ்டோர் விளம்பர படங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.
 | 

பூஜையுடன் தொடங்கிய சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் புதிய படத்தின் ஷூட்டிங்: இசை, இயக்குநர், ஹீரோயின் யார் தெரியுமா?

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.

தனது சரவணா ஸ்டோர் விளம்பர படங்களில் நடித்து வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன். இதைத்தொடர்ந்து, இவர் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வந்த நிலையில், சில நாட்களில் அது உறுதியானது. 

பூஜையுடன் தொடங்கிய சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் புதிய படத்தின் ஷூட்டிங்: இசை, இயக்குநர், ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த நிலையில், ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று காலை சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை சரவண ஸ்டோர்ஸ் விளம்பரங்களை இயக்கி வரும் இரட்டை இயக்குநர்களான  ஜேடி - ஜெர்ரி இப்படத்தை இயக்குகிறார்கள். இவர்கள் அஜித் நடித்துள்ள  ‘உல்லாசம்’, விசில் போன்ற திரைப்படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை சரவணா ஸ்டோர்ஸ் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். சரவணனுக்கு ஜோடியாக இப்படத்தில் நயன்தாரா, ஹன்சிகா நடிப்பதாக எல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில்,  கதாநாயாகியாக ஈத்திகாதிவாரி நடிக்கின்றார்.முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர்

பூஜையுடன் தொடங்கிய சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் புதிய படத்தின் ஷூட்டிங்: இசை, இயக்குநர், ஹீரோயின் யார் தெரியுமா?

எளிமையான இந்த பூஜையில் பிரபல இயக்குனர் எஸ்பி முத்துராமன், ஏவிஎம் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP