நாடகமாடிய ஸ்ரீரெட்டி... விசாரணையில் அம்பலம்!

நடிகை ஸ்ரீரெட்டி, நேற்று இரவு பிரபல பைனான்சியர் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், விசாரணையில் அது பொய்ப் புகார், என்று ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 | 

நாடகமாடிய ஸ்ரீரெட்டி... விசாரணையில் அம்பலம்!

நடிகை ஸ்ரீரெட்டி, நேற்று இரவு பிரபல பைனான்சியர் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், விசாரணையில் அது பொய்ப் புகார், என்று ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி, பல சினிமா பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியிருந்தார். தற்போது, ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதோடு, ஒருசில சமூக பிரச்னைகள் குறித்து அவர் குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் அவர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகளை கைது வலியுறுத்தி தமிழக அரசிடம் மனு கொடுக்க சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு, சினிமா பைனான்சியர் சுப்பிரமணியன், இரண்டு அடியாட்களுடன் தனது வீட்டுக்கு வந்து, தன்னை தாக்கியதாக புகார் போலீசில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி. தனது வீட்டில் உள்ள கண்ணாடியை அவர் உடைத்ததாகவும், தனது ஆடைகளை பிடித்து இழுத்ததாகவும் அதில் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவரை விசாரிக்க காவல்துறையினர் அழைத்திருந்தனர்.ஆனால், ஸ்ரீரெட்டி மதியம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. அப்போது அவரிடம் விசாரித்ததில், தயாரிப்பாளரை தானே வீட்டுக்கு அழைத்து, மது ஊற்றிக் கொடுத்ததாக ஸ்ரீரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தானே கண்ணாடியை உடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதன்பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு தரப்பினருக்கும் சமரசம் ஏற்படுத்தி அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP