நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்... அதிரடி அட்ஜெஸ்ட்மெண்ட்!

எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்தியும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கிறார்கள். நயன்தாராவுக்கு இந்தப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என சிவகார்த்தி முடிவெடுத்திருக்கிறார்.
 | 

நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்... அதிரடி அட்ஜெஸ்ட்மெண்ட்!

தமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய நடிகர் சிவகார்த்திகேயன். ஆனாலும் அவர் நயன் தாராவிற்காக காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்... அதிரடி அட்ஜெஸ்ட்மெண்ட்!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்தியும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கிறார்கள். அந்தப்படத்தின் ஷூட்டிங் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தை விசாரித்தபோது நயன்தாரா கால்ஷீட் இல்லாததால் சிவகார்த்தி வேறு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இந்தப்படம் ரஜினியின் ‘மன்னன்’ படத்தின் சாயலில் படமாக்கப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு சீனிலும் நயன்தாராவின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என சிவகார்த்தி விரும்புகிறாராம்.

நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்... அதிரடி அட்ஜெஸ்ட்மெண்ட்!

ஹீரோயிசத்துக்கான வாய்ப்புகளையும் நயன்தாராவுக்காக விட்டுக்கொடுக்கிறாராம். உதாரணத்துக்கு ஒரு காட்சி, மன்னன் படத்தில் ரஜினியை, விஜயசாந்தி அம்மா செண்டிமெண்டில் கார்னர் செய்வதுபோல, நயன்தாராவும் சிவகார்த்தி வேலை செய்யும் நிறுவனத்தை விலைக்கு வாங்கி பழி வாங்குகிறார். அப்படி நயன்தாராவிடம் சிக்கும் சிவகார்த்தி நிறுவனத்திலிருந்து வெளியேறுவது போல காட்சி அமைத்திருக்கிறார்கள். ஆனால், விரைவிலேயே அந்தக் காட்சி பின்வருமாறு மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.

நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்... அதிரடி அட்ஜெஸ்ட்மெண்ட்!

நயன்தாரா சிவகார்த்தியை பழிவாங்கிய வெற்றியில் கொக்கரிப்பதும், அவரிடம் சிவகார்த்தி மன்னிப்பு கேட்பது போல நடித்தும் காட்சியை மாற்றியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் ஏன் மாற்றுகிறார்கள் என விசாரித்தபோது, வேலைக்காரன் திரைப்படத்தில் நயன்தாராவின் காட்சிகள் பலவற்றை வெட்டியெடுத்து சிவகார்த்தியின் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தார் மோகன் ராஜா. தனது காட்சிகள் இல்லாதது குறித்து நயன்தாரா அப்போது எவ்வித அதிருப்தியும் காட்டாததாலேயே நயன்தாராவுக்கு இந்தப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என சிவகார்த்தி முடிவெடுத்திருக்கிறாராம்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP