சிம்பு கட் அவுட்-க்கு பாலாபிஷேகம்

நடிகர் சிம்புவின் "வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் வெளியானதையொட்டி சேலத்தில் ரசிகர்கள் சிம்புவின் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்தும், வெடி வெடித்து நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர்.
 | 

சிம்பு கட் அவுட்-க்கு பாலாபிஷேகம்

நடிகர் சிம்புவின் "வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் வெளியானதையொட்டி சேலத்தில் ரசிகர்கள் சிம்புவின் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர். 

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படம் வெளியாகும் அன்று கட்-அவுட்டிற்கு அண்டா , அண்டாவாக பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என சிம்பு கூறிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த வீடியோ குறித்து விளக்கமளித்த நடிகர் சிம்பு, பாலபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக உங்கள் தாய் அல்லது சகோதரிகளுக்கு ஏதாவது செய்யுங்கள் என்றும் கூறியிருந்தார்.

சிம்பு கட் அவுட்-க்கு பாலாபிஷேகம்

இந்நிலையில், இன்று (பிப்.1) நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியானதையொட்டி, சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கௌரி திரையரங்கு முன்பு சேலம் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக பால் பாக்கெட்டுகளை வழங்கினர்.

சிம்பு கட் அவுட்-க்கு பாலாபிஷேகம்

மேலும், சிம்புவின் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்தும் வெடி வெடித்து, நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP