சீதக்காதி - அய்யா மெழுகு சிலை இன்று திறப்பு!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் திரைப்படம் சீதக்காதி. இதில் அய்யாவாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் மெழுகு சிலையை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், இன்று மாலை திறக்கப்படுகிறது.
 | 

சீதக்காதி - அய்யா மெழுகு சிலை இன்று திறப்பு!

விஜய் சேதுபதி நடிப்பில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'சீதக்காதி. இதனை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் 25-வது திரைப்படமான இதில், இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசை 96-ன் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா. 

வயதான தோற்றத்தில் அய்யா எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தின் மெழுகு சிலையை சென்னை, எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், இயக்குநர் மகேந்திரன் இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார். 

சீதக்காதி - அய்யா மெழுகு சிலை இன்று திறப்பு!

இதனால் ஆர்வமுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். சீதக்காதி திரைப்படம் வரும் 20-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP