அப்ளாஸ் அள்ளிய பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த்?

பாலிவுட்டில் கடந்த அக்டோபரில் வெளியான திரைப்படம் 'அந்தாதுன்'. ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடித்த இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில், ஆயுஷ்மன்னின் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பதாக தெரிகிறது
 | 

அப்ளாஸ் அள்ளிய பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த்?

பாலிவுட்டில் கடந்த அக்டோபரில் வெளியான திரைப்படம் 'அந்தாதுன்'. இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கியிருந்த இந்தப் படத்தில், ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 

பார்வையற்ற பியானோ கலைஞரான, ஆயுஷ்மனுக்கு ஒரு கொலை நடந்ததும், அதை எவ்வாறு மாற்றுகிறார்கள் என்பதும் நன்கு தெரியும். ஆனால் அதற்கு அவர் சாட்சியாக முடியாது! இப்படி முரணான கதைகளத்தில் இயக்கப்பட்ட இந்தப் படத்திற்கும், ஆயுஷ்மனுக்கும் பலத்த வரவேற்பு அளித்தார்கள் ரசிகர்கள். 

இந்நிலையில் நடிகர் சித்தார்த், "இது ஏற்கனவே டேபிளில் இருக்கிறது. எத்தனைப்பேர் இந்த அழகிய அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் என்னைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். நான் சீரியஸாகக் கேட்கிறேன். சீக்கிரம் வோட் போடுங்கள்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

இதற்கு "கோ ஃபார் இட் மச்சான்" என அந்தாதுனின் ஒரிஜினல் நடிகர் ஆயுஷ்மன் ட்வீட்டியிருக்கிறார். 

ஸோ, விரைவில் அந்தாதுன் தமிழில் ரீமேக் ஆகலாம் எனத் தெரிகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP