சர்காரை பின்னுக்கு தள்ளி அடிச்சு தூக்கி சாதனை படைத்த ’தல’ யின் விஸ்வாசம்

பாகுபலி 2, சர்கார் படங்களை பின்னுக்கு தள்ளி TRP ரேட்டிங்கில் இந்தியளவில் முதலிடத்தை பிடித்து அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
 | 

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி வெளியான ’விஸ்வாசம்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  அஜித் படங்களில் அதிகம் வசூல் செய்த படமாகவும் விஸ்வாசம் உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தை மே 1-ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து, விஸ்வாசம் படம் TRP-யில் 1,81,43,00 புள்ளிகள் பெற்று, முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக அப்பட தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ், அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

பாகுபலி 2, பிச்சைக்காரன், சர்கார் படங்களின் TRP-யை பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் படம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்காரை பின்னுக்கு தள்ளி அடிச்சு தூக்கி சாதனை படைத்த ’தல’ யின் விஸ்வாசம்

இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும், சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

TRP ரேட்டிங் விவரம்:

விஸ்வாசம் - 18143
பிச்சைக்காரன் - 17696
பாகுபலி 2 - 17070
சர்கார் - 16906 
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP