மன நல மருத்துவரை சந்தித்த சமந்தா!

'இரும்புத்திரை' படத்தில் மனநல மருத்துவராக நடிக்கும் நடிகை சமந்தா, கேரக்டர் ஸ்டடி' செய்வதற்காக சில மன நலமாருத்துவர்களை நேரில் சந்தித்துள்ளார்.
 | 

மன நல மருத்துவரை சந்தித்த சமந்தா!

மன நல மருத்துவரை சந்தித்த சமந்தா!

'இரும்புத்திரை' படத்தில் மனநல மருத்துவராக நடிக்கும் நடிகை சமந்தா, கேரக்டர் ஸ்டடி' செய்வதற்காக சில மன நல மருத்துவர்களை நேரில் சந்தித்துள்ளார்.         

விஷால் ஹீரோவாக நடித்து, தனது விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கும் படம் 'இரும்புத்திரை'. இப்படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வில்லன் வேடத்தில் அர்ஜுன் நடிக்கிறார்.டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, மித்ரன் இயக்குகிறார்.

சமூகவலைதளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மர்மங்களை பற்றியும், அது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றியும் இப்படம் பேசுகிறது. இதை மிலிட்டரி பேக் டிராப்பில் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் மித்ரன்.

மன நல மருத்துவரை சந்தித்த சமந்தா!

இப்படத்தில் விஷால் மேஜர் கதிரவன் என்கிற ராணுவ அதிகாரியாக வருகிறார். சமந்தா டாக்டர் ரதிதேவி என்கிற மனநல மருத்துவராக நடிக்கிறாராம்.

இதற்காக, சில மன நல மருத்துவர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் வரும் பெக்கூலியர் கேஸ்கள் பற்றியும், அந்த கேஸ்களை அவர்கள் கையாளும் விதம் பற்றியும் கேட்டறிந்து, 'கேரக்டர் ஸ்டடி' செய்த பிறகு நடிக்க தயாரானாராம் சமந்தா.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP