நடிகை லட்சுமியுடன் நடனமாடும் சமந்தா!

`ஓ பேபி' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததாகத் தெரிவித்து, லட்சுமியுடன் சேர்ந்து நடனமாடும் ஒரு புகைப்படத்தையும் சமந்தா வெளியிட்டுள்ளார்.
 | 

நடிகை லட்சுமியுடன் நடனமாடும் சமந்தா!

BV நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா  "ஓ பேபி" என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தை சுனிதா டாடி தயாரிக்கிறார். மேலும் "ஓ பேபி" திரைப்படம் , 2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படமான‌ 'மிஸ் கிராணி' படத்தின் தழுவலாகும்.  இத்திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமி, ராவ் ரமேஷ் , நாகா ஷவுர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகை லட்சுமியுடன் நடனமாடும் சமந்தா!

தற்போது, `ஓ பேபி' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததாகத் தெரிவித்து , லட்சுமியுடன் சேர்ந்து நடனமாடும் ஒரு புகைப்படத்தையும் சமந்தா வெளியிட்டுள்ளார்.  
 
தமிழில் `சூப்பர் டீலக்ஸ்', தெலுங்கில் மஜிலி என அடுத்தடுத்த படங்களின் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறார் சமந்தா.  மேலும்  `96' படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP