கிகி நடனத்தால் சிக்கலில் மாட்டிய ரெஜினா... வழக்கு பாயுமா?

மரண நடனம் என அழைக்கப்படும் கிகி நடனத்தை ஆடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரெஜினா மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

கிகி நடனத்தால் சிக்கலில் மாட்டிய ரெஜினா... வழக்கு பாயுமா?

மரண நடனம் என அழைக்கப்படும் கிகி நடனத்தை ஆடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரெஜினா மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஓடும் காரில் இருந்து இறங்கி கார் செல்லும் திசையிலே ஆடி அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். இதுவே கிகி சேலஞ்ச். அப்படி காரில் இருந்து இறங்கும்போதோ அல்லது இறங்கிவிட்டு நடனமாடாமல் விழுந்தால் கிகி சேலஞ்ச் ஃபெய்ல்ஸ் என்பது இந்த வைரல் கேமின் விதிமுறை. இந்த கிகி சவாலை ஏற்ற பல இளைஞர்கள், பிரபலங்கள் தங்களது கிகி நடனத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். கிகி சேலஞ்ச் முயற்சியால் அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இதனை செய்யவேண்டாம் என போலீசார் எச்சரித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழ் - தெலுங்கு திரையுலக முன்னணி நடிகையான ரெஜினாவும் கிகி நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து கிகி நடனத்துக்கு தூண்டுவதுபோல் நடனமாடி வீடியோ வெளியிட்ட ரெஜினா மற்றும் இந்தி நடிகைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

யாராவது காரில் இருந்து விழுந்து மிகப்பெரிய கோர சம்பவத்தில் சிக்குவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்குமா போலீஸ் என்று அவர்கள் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். தற்போது கிகி சேலஞ்ச் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது. அதை ஆரம்பநிலையிலேயே தடுத்து நிறுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதை செய்யுமா?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP