ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி!

சர்கார் பட விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டு அவரை கைது செய்ய நடந்த முயற்சிகளுக்கு பின்னணியில் ரஜினியின் பங்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 | 

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யத் தூண்டிய ரஜினி... வெளியான பகீர் பின்னணி!

சர்கார் பட விவகாரத்தில் சர்ச்சையான காட்சிகள் ஆளும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டு அவரை கைது செய்ய நடந்த முயற்சிகளுக்கு பின்னணியில் ரஜினியின் பங்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப நடிகர்கள் சிலர் அரசியல் கட்சிகளை திடங்கி வருகின்றனர். இதற்காக அரசாங்கத்தை விமர்சிக்கும் காட்சிகள் அவர்களது படங்களில் இடம்பெறச் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் ஆளும் தரப்பிற்கு எதிராக கருத்துகள் பெரும் எதிர்ப்பை சந்தித்தன. இதனால் எழுந்த போராட்டங்கள் சென்சார் மூலம் சில காட்சிகளை நீக்கப்பட்ட பின்னர் அடங்கி இருக்கிறது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஆளும் தரப்பு இப்போதும் கடும் கோபத்தில் இருக்கிறது. 

காரணம் ரஜினி. ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்காக தனது மக்கள் மன்றத்தை வலுவாகக் கட்டமைத்து வருகிறார். அவரது வருகை அரசியல் கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்ல் பேட்ட, 2,O ஆகிய அவரது படங்கள் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரஜினியை சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார். இதுவரை ரஜினி படங்களிலேயே இல்லாத அளவுக்கு அரசியல் பேசப்போகும் படமாக அமைய உள்ளது. ரஜினிக்கு இந்தப்படம் அரசியல் ரீதியாக பெரும் பக்கபலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து சர்கார் படத்தில் கடுமையாக விமர்சனம் செய்த ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கப்போகும் படத்தில் இன்னும் அதிகமாக விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதனை மனதில் வைத்தே முருகதாஸை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறது எடப்பாடி அரசு. தக்க பாடத்தை முருகதாஸுக்கு புகட்டினால், ரஜினி படத்தில் அடக்கி வாசிப்பார் என்பதால் முருகதாஸ் மீது வழக்குப்போட்டு நள்ளிரவில் கைது முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றாலும் பல்வேறு வகைகளில் அவருக்கு சிக்கலை ஏற்படுத்த ஆளும் தரப்பு திட்டம் தீட்டி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் அவருக்கு ஆதரவாக ரஜினி வெளிப்படையாக வந்து கருத்துக்களை தெரிவித்ததையும் ஆளும் தரப்பு ரசிக்கவில்லையாம். ஆகவே ஏ.ஆர்.முருகதாஸுக்கு அடுத்தடுத்து சிக்கலை ஏற்படுத்தினால் மட்டுமே அடுத்து ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் கட்டுப்படுத்த முடியும் என ஆளும் தரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

முருகதாஸ் மீது வழக்குத் தொடர ரஜினியே காரணம் என்கிற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இதையும் படிங்க... இலவச மொபைல் என்னாச்சு..? ஆப்பு வைத்த சர்கார்... கலக்கத்தில் எடப்பாடி!

’நன்றிகெட்ட விஜய்...’ விடாது துரத்தும் எடப்பாடி சர்கார்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP