ரஜினிக்கு சிறப்பு விருது அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 | 

ரஜினிக்கு சிறப்பு விருது அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரைப்படத்துறைக்கான 'Icon of Golden Jubilee' விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  

கோவாவில் 50வது சர்வதேச திரைப்படவிழா வரும் நவ 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய சினிமாவில் முக்கிய பங்காற்றியமைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான 'Icon of Golden Jubilee' விருது வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகை இசபெல் ஹூபர்ட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த மதிப்புமிக்க கவுர விருதினை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி கூறுவதாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP